புத்தகப் பையினால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பாடசாலைகளுக்குக் கொண்டுச் செல்லும் புத்தகப் பைகளின் எடை அதிகரிப்பால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல உடல்நலப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து அவ்வப்போது விவாதங்கள் நடத்தப்பட்டாலும், சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் இதுவரையும் எவ்வித உரிய தீர்வினை காணவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
விரைவில் தீர்வு...
புத்தகப் பைகளின் எடை அதிகரிப்பு காரணமாக, பாடசாலை மாணவர்களிடையே முதுகுத் தண்டு பிரச்சினை, சமநிலைப் பிரச்சினை, தலை வலி மற்றும் கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சினைகள், நரம்பு தொடர்பான கோளாறுகள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த பிரச்சினை தொடர்பில் விரைவில் உரிய தீர்வினை எடுக்க வேண்டும் என்றும், தரப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் பாடசாலை புத்தகப் பையொன்றை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஒரு நாளைக்கு பாடசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க Cineulagam

வீட்டில் பள்ளம் தோண்டும்போது தங்கம் கிடைத்ததாக கூறிய நபர்கள்: தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
