அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்தாண்டின் இறுதி முதல் இந்தாண்டின் ஜுன் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 2.5 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இது கடந்த ஏப்ரல் மாதம் காணப்பட்ட கையிருப்பின் அளவிலேயே அது உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பில் சீன எக்ஸிம் வங்கியுடனான அந்நிய செலாவணி பரிமாற்ற வசதியும் அடங்கும்.
மே மாதத்தில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் 164 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டது.
மேலும் இந்தாண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் மொத்த சுற்றுலா வருமானம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.