டொலரின் மதிப்பு சரிவு! குறையும் பொருட்களின் விலை - சாதனையாக அறிவிக்கும் அரசாங்கம்
உண்மையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுமக்கள் மீது தேவையற்ற அழுத்தங்களைத் திணிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியினர், எல்லாவற்றையும் விமர்சிக்க முனைகிறார்கள். அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு, ரூபாய் வலுப்பெறுதல், பொருட்களின் விலை குறைதல், நாட்டின் ஒட்டுமொத்த உறுதியற்ற தன்மை குறைதல் போன்ற தற்போதைய நேர்மறையான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் இந்த சாதனைகளை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு போன்றவற்றையும் எதிர்க்கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.
உண்மையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்பது புரிந்துகொள்ளத்தக்கது.
அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்கள் மீது தேவையற்ற அழுத்தங்களைத் திணிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |