மிகவும் சிறப்பாக செயற்பட்டுள்ள இலங்கை ரூபா! மத்திய வங்கி அறிவிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சிறப்பாகச் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வரையான இந்த வருடத்தில் முடிவடைந்த காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 12.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் தகவல்
இலங்கை மத்திய வங்கியின் தகவல்களின் படி, யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியும் அந்நிய செலாவணி நகர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரை யெனுக்கு எதிராக ரூபாய் 23.8 சதவீதமும், பவுண்டிற்கு எதிராக 6.5 சதவீதமும், யூரோவுக்கு எதிராக 10.4 சதவீதமும், இந்திய ரூபாய்க்கு எதிராக 13.2 சதவீதமும் உயர்ந்துள்ளது.