கடும் கலக்கத்தில் இலங்கை ஆட்சியாளர்கள்! அம்பலமாகவுள்ள பல ரகசியங்கள்
சமகால அரசாங்கத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ள பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சூளுரைத்துள்ளனர்.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய ஊழல்கள் அனைத்தையும் அடுத்த வாரத்தில் இருந்து அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் அம்பலப்படுத்த தீர்மானித்துள்ளனர்.
தற்போது நாடு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. இது எவ்வாறு ஏற்பட்டது. தங்களை பதவி விலக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது தொடர்பான தகவல்களை மக்களுக்கு தெளிவுபடுத்தவும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் நாடு முழுவதும் பாரிய பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுயேச்சைக் குழுவாக நாடாளுமன்றத்தில் அமரத் தீர்மானித்துள்ளனர்.
ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த பங்காளி கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்து சுயாதீனமாக செயற்பட்டால், அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.
இவர்களின் எச்சரிக்கையை அடுத்து ஆட்சியாளர்களுடன் மிகவும் நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கலக்கத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பல்வேறு மோசடியில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சரான விமல் வீரவன்ச வெளிப்படையாக விமர்ச்சித்திருந்தார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் அமைச்சு பதவி பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.