இரகசியமாக விற்கப்படும் இலங்கை வளங்கள் (Video)
நாட்டின் அனைத்து வளங்களையும் இரகசியமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
அவிசாவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற அவர், அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ள போதிலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் முன்னிலையில் தனது அதிகாரத்தை பரிசோதித்துப் பார்க்குமாறு சவால் விடுத்துள்ளார்.
முழு நாட்டையும் தவறாக வழிநடத்திய வண்ணம் அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்தப் பாரிய விற்பனைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் எனக் கூறிய எதிர்க் கட்சித் தலைவர், நாட்டில் ஏல அரசாங்கமே தற்போது காணப்படுவதாக தெரிவித்தார்.
நாட்டு மக்கள் சாப்பிட முடியாமல் பெருமூச்சு விடும்போது கூட, இந்த நிலை குறித்து அரசாங்கம் கவலைப்படவில்லை என்று தெரிவித்த அவர், நாட்டின் அனைத்துத் துறைகளையும் பேரழிவில் ஆழ்த்தியுள்ளதெனத் தெரிவித்தார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
