மீண்டும் தாயகம் திரும்பவுள்ள இலங்கை அகதிகள் ..
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள், தன்னார்வ அடிப்படையில், மீண்டும் தாயகம் திரும்புவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்று யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பின் இந்திய பிரதிநிதி அரெட்டி சியென்னி இதனை நேற்று(9) நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 200 இலங்கை அகதிகள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
மீள்திரும்பல் பணி
எனினும் அவர்களில் நான்கு பேரை இலங்கையின் குடிவரவு அதிகாரிகள் கைது செய்தமையை அடுத்து, தன்னார்வ மீள்திரும்பல் பணிகளை யுஎன்எச்சிஆர் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

எனினும் தற்போது இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பில் செயற்பட்டு வருவதாக சியேன்னி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 80ஆயிரம் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். அவர்களில் 2002 முதல், 18,643 பேர் தன்னார்வ அடிப்படையில் தாயகம் திரும்பியுள்ளனர்.