நாடு திரும்பும் அகதிகள்
இழப்பீடுகளுக்கான அலுவலகத்துடன் இணைந்து, இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மற்றும் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இதற்காக அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு, நாடு திரும்பியவர்களுக்கு உரிய ஆவணங்களை தாமதமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
வடமாகாணத்தில் நடமாடும் முகாம்
இந்தக்குழுவில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், வடமாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்குவர்.
அகதிகள், இலங்கையின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் வகையில், செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும், இலங்கைக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான துணை ஆவணங்களைப் பெறுவதற்கு உதவிகளை வழங்குவதற்கும் இந்தக்குழு உதவும்.
ஆவண உதவிகளை வழங்குவதற்காக இந்தக்குழு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வடமாகாணத்தில் நடமாடும் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளது.
சில இந்திய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தொழில்முறை மற்றும் கல்வித்
தகுதிகளின் அங்கீகாரம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க தொடர்புடைய
பங்குதாரர்களுடன் தனி சந்திப்புகளை இந்தக்குழு நடத்தவுள்ளது.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
