ஜனாதிபதியின் இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம்! ஜெ. ஸ்ரீ ரங்கா மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஜெ. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே 3ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் திலினி கமேக உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இல்லத்துக்கு தீ மூட்டியமை
கடந்த வருடம் ஜீலை 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இல்லத்துக்கு அடையாளந்தெரியாத நபர்கள் தீ மூட்டியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா , 2011
இல் வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஏற்கெனவே
கைது செய்யப்பட்டதுடன், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான
குற்றச்சாட்டில் இவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri