மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனத்தைத் தனியார் மயப்படுத்தாதே! (Video)
ஸ்ரீலங்கா காப்புறுதி நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரியப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இப் போராட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா காப்புறுதி நிறுவன வளாகத்தில் இன்றைய தினம் (15.03.2023) நடைபெற்றுள்ளது.
இலங்கையில் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தரக்கூடடி ஸ்ரீலங்கா காப்புறுதி நிறுவனத்தை தனியார் மயப்படுத்தி, வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கையை அந்த நாட்டுக்கு அடிமையாக்குகின்றது.
பாதுகாப்பு
அத்துடன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனை தாங்கள் வன்மையான கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், இந்த அரசாங்கத்தைப் பதவி விலகுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இப்போராட்டத்தையடுத்து, ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸக்கு வளாகத்திற்கு முன்பான இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர்த் தாங்கி பிரயோக கொள்கலன்களும் வைக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
