இலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது
இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற குற்ற வரலாறு இவருக்கு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பணியிலிருந்து நீக்கம்
சுமித் குணசேகர என்ற சந்தேகநபர் 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர் என்றும், அதில் ஒரு சிறுவருடன் தொடர்புடைய பாலியல் குற்றத்தை புரிந்ததாக அவரே ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், 2004 ஆம் ஆண்டிலும் ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். குணசேகர மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருந்தபோதிலும், கனடாவில் செய்த குற்றங்களால், அமெரிக்காவில் சட்டப்படி இருக்க இவருக்கு உரிமை இல்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தத் தகவல் தெரியவந்தவுடன், ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் அவரை உடனடியாகப் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
"பாலியல் குற்றவாளி ஒருவர் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam