ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகலவத்தை தொகுதியின் பிரதான அமைப்பாளரான ரஞ்சித் சோமவங்ச பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்து அவரது கட்சியில் இணைந்து கொண்டார்.
முன்னதாக, மேல் மாகாண சபையின் சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சராகவும் கல்வி, கலாசாரம் மற்றும் கலை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் ஊடாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சோமவன்ச, 1993
இல் மேல் மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, அவைத் தலைவர்
மற்றும் பிரதித் தலைவர் பதவிகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
