ரணிலுடன் இணையாவிட்டால் சஜித்துக்கு எதிர்காலம் இல்லை! ஹரின் பெர்ணான்டோ
"ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படாவிட்டால் சஜித் பிரேமதாசவின் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விடும்”என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"சஜித் பிரேமதாச தன்னைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதியுடன் மீண்டும் இணைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
சஜித்தின் அரசியல் எதிர்காலம்
தனித்துப் பயணிக்க முடியாது என்பது ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்களுக்கும் தெரியும். எனினும், குழப்பம் விளைவிக்கும் ஒரு சிலர் உள்ளனர்.
எது எப்படியோ இணைந்து பயணிக்காவிட்டால் சஜித்தின் அரசியல் எதிர்காலம் இல்லாமல்போய்விடும்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் அரசுடன்
இணைவதற்குத் தயாராகவே உள்ளனர். உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது
இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரியவரும்" என்றார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
