ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை!- அமைச்சர் விளக்கம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
முரண்பாடுகள் இல்லை
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதிக்கும் மொட்டுக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன என்று பலர் சுட்டிக்காட்டுகின்றனர். உண்மையில் அப்படி எவ்வித முரண்பாடுகள் இல்லை.
ரணில் விக்ரமசிங்கவின் அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே அவரை ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளித்தது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு தற்போது நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டெழும் என்று
மக்கள் பலமாக நம்புகின்றார்கள் என்றார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
