கூட்டமைப்பை ஒருபொழுதும் சிதைவடைவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! குருசாமி சுரேந்திரன்
தமிழ் மக்கள், தமிழ் தேசிய பரப்பினிலே செயலாற்றும் அரசியல் தரப்புக்கும் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்று பொது அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடி எமது தாயகப்பரப்பான வடக்கு கிழக்கு மண்ணிலே தொடர்ச்சியாக பல போராட்டங்களையும் கோரிக்கைகளையும் செய்து வருகின்றார்கள் எனவும் அவர்களுடைய அந்த முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவர்களது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
”எமது இனம் இன்று முகம் கொடுத்திருக்கக் கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலையிலே தமிழ் தரப்பினர், தமிழ் தேசிய தரப்பில் உள்ள அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டிய காலத்தின் கட்டாயத்தினை வலியுறுத்தி அவர்கள் இந்த செயற்பாட்டினை செய்து வருகின்றார்கள்.
அவர்களுடைய கோரிக்கைகளை நாங்கள் செவிமடுத்துள்ளோம். கடந்த ஒன்றரை வருடமாக தமிழ் தேசிய தரப்பில் செயலாற்றுபவர்களும் அரசியல் கட்சிகளும் ஒருமித்து செயற்படுத்துவதற்கான பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
அது தொடர்ந்தும் நடைபெறும் என நாங்கள் நம்பிக்கை தெரிவிக்கிறோம். அரசாங்கமானது ஒரு அரசியல் தீர்வினை தருவதற்கு எங்களை அழைத்துள்ளது. ஆனால் அரசாங்கமோ அல்லது அழைப்பினை விடுத்தவர்களோ அது தொடர்பில் பலமாக இல்லை என்ற யதார்த்தத்தையும் நாங்கள் அறிந்து கொண்டுள்ளோம்.
ஆகவே நாங்கள் எமது மக்கள் முகங்கொடுக்கின்ற அரசியற் கைதிகள் விடுதலை, காணிஅபகரிப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அதுபோல காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்ற விடயங்களை முன்வைத்து அவற்றுக்கான தீர்வினையும், அதே போன்று அரசியல் யாப்பிலே ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை முற்றுமுழுதாக பகிர்ந்து ஒரு பலமான மாகாணசபை கட்டமைப்பை ஏற்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடாத்த வேண்டும் என்ற விடயத்தினையும் முன்வைத்து அவை நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் அரசியல் தீர்வினை பற்றி பேசுவதில் தயாராக இருக்கிறோம்.
பல இலட்சம் மக்களுடைய உயிர் தியாகத்திலும், பல்லாயிரக்கணக்கான போராளிகளது உயிர் தியாகத்திலும் முயற்சியிலும் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒருபொழுதும் சிதைவடைவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாங்கள் தொடர்ந்தும் பயணிப்போம் என்ற எண்ணப்பாட்டில் தான் நாங்கள் இன்னும் இருக்கின்றோம்.
கூட்டமைப்பை நாங்கள் பதிவு
செய்கின்றபோதும், நாங்கள் வரையறுத்து கட்டமைக்கின்றபோதும் பொதுச் சின்னமாக ஒரு
சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சிலவேளை வீட்டுச் சின்னம் பொதுவான சின்னமாக தெரிவுசெய்யப்படாவிட்டால் நாங்கள்
பொதுவான ஒரு சின்னத்தை தெரிவுசெய்ய வேண்டும்” என்றார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
