தமிழரை ஏமாற்ற முயன்றால் போராட்டம் வெடித்தே தீரும்! அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை (Video)

M A Sumanthiran Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Rakesh Jan 06, 2023 10:45 PM GMT
Report

"எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்பதில் எமக்கும் நம்பிக்கையில்லாமல்தான் ஜனாதிபதியுடனான பேச்சில் பங்கேற்கின்றோம். ஆனால், அரசு இந்தக் கால எல்லைக்குள் தீர்வு காண்பதாகக் கூறுகின்றது. எனவே, இந்த கால எல்லைக்குள் இனப் பிரச்சினைக்காண தீர்வை அரசு வழங்காது எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முயன்றால் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம். இதனை நாம் விடுக்கும் எச்சரிக்கையாக அரசு கருத்தில் எடுக்க வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

"கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டு, சபையில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களின் இணக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு 

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி சர்வகட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

தமிழரை ஏமாற்ற முயன்றால் போராட்டம் வெடித்தே தீரும்! அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை (Video) | Sri Lankan Political Crisis

இந்தக் கூட்டத்தில் அரசியல் தரப்பினர் முற்போக்கான பல சிறந்த விடயங்களை முன்வைத்தனர். பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பல விடயங்களை எடுத்துரைத்துள்ளோம்.

அரசியல் தீர்வு ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்துக்கு முன்னர் அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வைக் கோருகின்றோம். அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகக் கோரி நிற்கின்றது. அர்த்தமற்ற அரசியல் தீர்வு அவசியமற்றது.

அதனை யாரும் கோரப்போவதுமில்லை ஏற்கப்பபோவதுமில்லை. தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஆரம்ப காலத்தில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண புதிதாக திட்டங்களை வகுக்க வேண்டிய தேவை கிடையாது

ஆனால், அந்த யோசனைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண புதிதாக திட்டங்களை வகுக்க வேண்டிய தேவை கிடையாது. ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களைச் செயற்படுத்துவது பொருத்தமானதாக அமையும்.

தமிழரை ஏமாற்ற முயன்றால் போராட்டம் வெடித்தே தீரும்! அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை (Video) | Sri Lankan Political Crisis

பல வருடங்களாக இனப்பிரச்சினைக்குக் கிடைக்காத தீர்வு எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்துக்குள் அதாவது ஒரு மத காலத்துக்குள் கிடைக்குமா எனப் பல்வேறு தரப்பினர் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாமல்தான் நாமும் கலந்துகொள்கின்றோம். அதனை அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். தீர்வுத் திட்ட விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை என்ற பழிச்சொல் கூட்டமைப்புக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

அதனால்தான் பேச்சில் பங்கேற்கின்றோம். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் இதயசுத்தியுடன் பேச்சில் கலந்துகொள்கின்றோம். வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

அந்தக் கால எல்லைக்குள் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் அதன் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். அரசியல் தீர்வு வழங்குவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு பிறகு ஒரு நாடகத்தை அரங்கேற்றி தமிழர்களை ஏமாற்றும் வகையில் சர்வதேசத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவினால் அது அரசுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

குறுகிய காலத்துக்குள் அரசியல் தீர்வு வழங்க முடியாது என்பதை அறிந்துகொண்டு எமமையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் வகையில் அரசு செயற்பட்டால் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம்.

75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வு வழங்குவதாகக் குறிப்பிட்ட அரசுக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இதனை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்" என்றார். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US