அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் இலங்கையர்
அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணியில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரும் விளையாடி வருகின்றமை குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நேற்று களம் இறங்கிய அஷ்டன் அகர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவரும் விளையாடியிருந்தார்.
ஏஷ்டன் ஏகாரின் தந்தை ஜோன் ஏகார் ஒரு அவுஸ்திரேலியர் மற்றும் சோனியா ஹெவாவிஸ்ஸ என்ற தாய் இலங்கையில் பிறந்த பெண் ஆவார்.
சோனியா ஹெவாவிஸ்ஸ வெளியிட்ட தகவலுக்கமைய, அவர் 1974 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
அவுஸ்திரேலியராக இருந்த போதிலும், ஏஷ்டன் ஏகார் தனது இலங்கை வம்சாவளி பற்றி பெருமிதம் கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
சோனியா கூறுகையில், தான் நீண்ட காலமாக இலங்கைக்கு வெளியே இருந்ததாகவும், ஆனாலும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இலங்கையின் பழக்கவழக்கங்களை இன்னும் பின்பற்றுவதாகக் கூறுகிறார்.
1993 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிறந்த ஏஷ்டன் அகர் மேற்கு அவுஸ்திரேலியாவுக்காக தனது முதலாவது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர் அவர் ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் பெர்த் ஸ்கவுட்ஸ் அணிக்காக விளையாடினார். 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு முதல் முதலாக கிடைத்தது.
2015 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் ருவென்டி ருவென்டி அணியில் சேர்க்கப்பட்டார்.
2013-ம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் 11-வது துடுப்பாட்ட வீரராக களமிறங்கி சதம் அடித்து உலக சாதனையும் படைத்தமை குறிப்பிடத்தக்கது.