ஒரு நாள் கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை படைத்த விஷ்மி குணரத்னே
இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே தனது முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக விளையாடிய விஷ்மி குணரத்னே (Vishmi Gunaratne), தனது முதல் ஒருநாள் சர்வதேச (ODI) சதத்தை அடித்து, இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் விஷ்மி குணரத்ன சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அதாவது இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் அணிக்காக சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன பெற்றுள்ளார்.
ஒருநாள் தொடர்
குணரத்னேவுக்கு முன்னர், சாமரி அதப்பத்து (Chamari Athapaththu) ஒருநாள் போட்டிகளில் 9 சதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ரி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற ரி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
அயர்லாந்து அணி
இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 260 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை சார்பில் அதிகபட்சமாக விஷ்மி குணரத்ன சதம் (101) அடித்து அசத்தினார். அயர்லாந்து தரப்பில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
விஷ்மி 98 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர் விளாசினார். அவர் அணியின் ஸ்கோர் எண்ணிக்கை 157 ஓட்டங்களாக இருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஹசின் பெரேரா (46), சுகந்திகா குமாரி (18), அனுஷ்கா சஞ்சீவனி (17) ஆகியோர் விளையாடினர்.
50 ஓவர் முடிவில் இலங்கை அணி மொத்தம் 260 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 49.2 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 261 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |