உலகளாவிய ரீதியில் இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91வது இடத்திற்கு முன்னேறியுள்ளது,
கடந்த ஆண்டு 96வது இடத்தில் இருந்து தற்போது ஐந்து இடங்களால் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா
சர்வதேச வானூர்தி போக்குவரத்து சங்கத்தின் பிரத்தியேக தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஹென்லி பாஸ்போட் குறியீடு, முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி உலகளவில் கடவுச்சீட்டுக்களை தரவரிசைப்படுத்துகிறது.
இந்தப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் சிங்கப்பூர் 2025 ஆம் ஆண்டில் முதலிடத்தில் உள்ளது.
2025 குறியீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை சரிவைக் கொண்டிருக்கின்றன. அவை இப்போது முறையே 6வது மற்றும் 10வது இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, குறியீட்டின் 20 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக 10 வது இடத்துக்கு சென்றுள்ளது.
இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்து, 85வது இடத்திலிருந்து 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சவுதி அரேபியாவும் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது. அது 54வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




