வெளிநாட்டிலிருந்து வந்த பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பயணி விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகரெட் மீட்பு
ஷார்ஜாவிலிருந்து Gulf Air விமானம் G.- 9587 மூலம் இன்று அதிகாலை 02.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12,000 பிளாட்டினம் மற்றும் மென்செஸ்டர் சிகரெட்டுகள் அடங்கிய 60 சிகரெட் அட்டைப்பெட்டிகளை தனது பொதிகளில் எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பயணி தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருடன் சிகரெட் பொதியும் 25ஆம் திகதியன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam