கொழும்பை உலுக்கிய திடீர் மழை : வெளியான காரணம்
கொழும்பில் நேற்று(06.11.2026) மாலை எந்த விதமான தீவிர வளிமண்டல நிலைமைகளும் இல்லாமல் குறுகிய நேரத்தில் மிகக் கனமழை கிடைத்திருக்கின்ற நிலையில் இதனை மேக வெடிப்பு என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 49 நிமிடங்களில் 120 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இதனையே மேக வெடிப்பு அல்லது முகிற்பேழ் மழை என அழைப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
பெரிய நீர்த்துளிகளாக மாறும்
பேஸ்புக் பதிவிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், குறுகிய நிலப்பரப்பில் அதாவது 20 முதல் 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவில், ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் (10 செ.மீ) அதிகமாக மழை கிடைக்கும் போது மேக வெடிப்பு என வரையறுக்கப்படுகிறது.
மிக மிகக் கன மழை சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும்.
மேலும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காற்று மேல்நோக்கிச் செல்லும்போது அங்கே கார் திரள் கார்முகில்கள் உருவாகின்றன.
மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் மேலெழும் வெப்பக் காற்றால் கீழே விழாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய நீர்த்துளிகளாக மாறுகின்றன.
ஒன்றிரண்டு நாட்களுக்கு மிதமான மழை
இதனால் திடீரென மேல்நோக்கி வீசும் காற்று பலவீனமடையும் போது, மேகத்தில் தேங்கியுள்ள அத்தனை நீரும் ஈர்ப்பு விசையால் ஒரே நேரத்தில் கவிழ்த்து ஊற்றியது போல (அருவி போல்) கொட்டிவிடுகிறது.

குறுகிய நேரத்தில் கிடைக்கும் இந்த மழை வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும்.
இந்த மேக வெடிப்பு மழை மலைப்பாங்கான பகுதியில் நிகழும்போது பெரும் மண்சரிவு நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு.
எனினும், ஒரே இடத்தில் மீண்டும் சில நாட்கள் இடைவெளியில் மேக வெடிப்பு நிகழாது. ஆனால் மேக வெடிப்பு நிகழ்ந்ததன் பின் அந்த இடத்தில் ஒன்றிரண்டு நாட்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan