அவசர கால நீடிப்பு தொடர்பான தீர்மானம்: மீண்டும் கூடும் நாடாளுமன்றம்
அவசர கால நீடிப்பு தொடர்பான தீர்மானம், பொது பாதுகாப்பு ஒழுங்குவிதி கீழ், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விவாதமானது, எதிர்வரும் (06.1.2026)செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் கோரிக்கை
முன்னதாக டிட்வா சூறாவளி ஏற்படுத்திய சேதங்களைத் தொடர்ந்து, 2025 நவம்பர் 28 அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால விதிகளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துள்ளார்.

இது தொடர்பிலேயே, விவாதம் நடத்தப்படவுள்ளது ஆனால், இந்த விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரம் போதியதல்ல என எதிர்க்கட்சியினர், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற வணிகக் குழுவுக்கு தெரிவித்துள்ளனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 15 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam