சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பில் இலங்கை பிரஜைகள் கைது
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தென் இந்தியாவின் கேரளா, அங்கமாலியில் மூன்று இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநில பயங்கரவாத தடுப்புப் படையுடன் ஒருங்கிணைத்து தமிழ்நாடு கியூ-கிளை காவல்துறையினர் இவர்கள் மூவரையும் அங்கமாலிக்கு அருகிலுள்ள கிடங்கூர் என்ற இடத்தில் வைத்து இன்று கைது செய்தனர்.
கல்வியியல் கல்லூரி ஒன்றுக்கு அருகில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இவர்கள் வசித்து வந்தனர்.அங்கமாலியில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இருவர் அதானி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர்.பின்னர் இவர்கள் மூவரும் நெடும்பசேரியில் உள்ள காவல் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிடங்கூரில் கைது செய்யப்பட்டவர், தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார் என்று தெரியவந்துள்ளது.
இந்த மூவரும் தமிழகத்தில் பதிவான பிற குற்றங்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியே இவர்கள் கேரள அங்கமாலியில் தங்கியிருந்தனர் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam