பிரித்தானியாவில் பறக்கவிடப்பட்ட இலங்கை தேசியக்கொடி தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது
பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட இலங்கை தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகர சபையினரால் இந்த கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
இதனால் மிகவும் வேதனை அடைந்த பிரித்தானியா வாழ் தமிழர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் உதவியுடன் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
“உங்கள் நடவடிக்கையால் நாம் மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளோம்.
இந்தச் செயல் நியூகாம் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் மனதைப் பாதிக்கும் என்பதைச் சிந்திக்காமல் மேற்கொள்ளப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் ஆதலால் தயவுசெய்து அந்த கொடியை அகற்றுங்கள்” என்பன போன்ற வாசகங்கள் அந்த மின்னஞ்சல்களில் அடங்கியுள்ளது.
இதே நேரத்தில் இளையோர் அமைப்பினர் சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னெடுத்த இது எங்களின் சுதந்திர நாள் அல்ல #notmyindependence என்றும் இலங்கை ஒரு இன அழிப்பு செய்யும் நாடு #Srilankagenocide என்ற குறியீடுகள் பல்லாயிரக் கணக்கில் பகிரப்பட்டது.
கீச்சுத்தளத்தில்(twiiter) மிக முக்கிய இடத்தை அந்நேரத்தில் எட்டியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் மின்னஞ்சல்களுக்குப் பதிலளித்த நியூகாம் நகரசபை தலைவர் Rokhsana Fiaz இந்த விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து " இச்செயல் நடந்ததை எண்ணி நான் வேதனையும், வருத்தமும் அடைகின்றேன்.
இது தொடர்பாகத் தலைமை நிர்வாகியிடம் விசாரணை செய்யும் படி பணித்துள்ளேன். ” எனத் தெரிவித்துள்ளார். அதே போல் தலைமை நிர்வாக அதிகாரியும் பதிலளித்திருந்தார்.
அதில் “ இந்த கொடி ஏற்றப்பட்டத்தால் நீங்கள் அடைந்த வருத்தத்திற்கும், துன்பத்திற்கும் என்னுடைய மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள் உங்களுடைய நிலைமையைத் தெளிவாக விளக்கியது. எங்களுடைய பிழையை நாம் புரிந்துகொண்டோம். அடுத்த வருடம் இந்த தவறை செய்யமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.







சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
