கொழும்பில் காதலியின் ஏமாற்றத்தால் காதலனின் விபரீத முடிவு
கொழும்பு, ஹோமாகம பிரதேசத்தில் தொலைபேசி அழைப்புக்கு தனது காதலி பதிலளிக்காததால் மனமுடைந்து இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடபுசல்லாவ பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் சரத் குமார் என்ற 27 வயதுடைய நபரே நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஹோமாகம, கலவிவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீட்டில் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
பதிலளிக்காத காதலி
வேலை முடிந்ததும் காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்பேற்படுத்தியுள்ளார். ஆனால் காதலி பதிலளிக்காதமையினால் குறித்த இளைஞன் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த இளைஞன் எப்படித் தூக்கில் தொங்கத் தயாராகிறார் என்பதைத் தெரிவித்து பல புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தனது காதலிக்கு அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை ஹோமாகம மேலதிக மரண விசாரணை அதிகாரி மானெல் கமகேவினால் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக ஹோமாகம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
