கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதியால் ஏற்பட்ட சிக்கல்
கொழும்பு, பொரளையில் திடீரென வீதி தாழிறங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொரளை, மொடல் பார்ம் சந்திப்புக்கு அருகில் இருந்து டி.எஸ். சேனநாயக்க சந்திப்பு வரை கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியின் ஒருபகுதி தாழிறங்கியுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொரளை மயானம்
மொடல் பார்ம் சந்திப்பு வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள், மொடல் பார்ம் சந்திப்பிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டாரத்தை நோக்கிச் சென்று பேஸ்லைன் வீதிக்குள் நுழையலாம்.
ராஜகிரியவிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள், கொட்டாவ வீதி வழியாக ஆயுர்வேத சுற்றுவட்டாரத்தை நோக்கி கொழும்புக்குள் நுழையலாம்.
கொழும்பிலிருந்து மொடல் பார்ம் சந்திப்பு வழியாக ஸ்ரீ ஜெயவர்தனபுர வீதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள், டி.எஸ். சேனநாயக்க சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கொட்டாவ வீதி வழியாக பொரளை சந்திப்பு ஊடாக ஸ்ரீ ஜெயவர்தனபுர சாலைக்குள் நுழையலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
