உள்ளூராட்சி சபைத் தேர்தல்: அச்சுப் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (13.042023) ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அச்சகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு கொடுப்பனவு
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், திறைசேரியினால் இதுவரை பணம் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நினைவூட்டல்
இதன்படி, இது தொடர்பில் திறைசேரிக்கு மீண்டும் நினைவூட்டல் விடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அச்சு வேலைகள் தொடர்பில் பணம் செலுத்தப்பட வேண்டும் என அச்சகத்தின் தலைவர் கங்கானி கல்பனா லியனகே இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் திறைசேரிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri