உள்ளூராட்சித் தேர்தல் நடந்தால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா...! - பந்துல கேள்வி
"உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா" என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், தேர்தலைத் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தினால் நிச்சயம் தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (25.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு உடன்பாடில்லை
அத்துடன், "நான் அடிப்படையில் சர்வதேச நாணயத்திடம் கடன் பெறுவது தொடர்பில் உடன்படாதவன். ஆனால், நாடு இப்போது வீழ்ந்திருக்கும் இடத்திலிருந்து மீண்டெழ இந்த நிதியத்தைத் தவிர வேறு வழியில்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இந்தச் சந்தர்ப்பத்தில் வரியை அதிகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது சுமக்க
முடியாத அளவு அதிகமான அளவு. ஆனால், இதை எங்களால் நீக்க முடியாது. எதிர்காலக்
கடன்களை அடைப்பதற்குப் போதுமான இலாபம் அரசுக்குக் கிடைக்காவிட்டால் கடன்
கேட்டு எங்களால் சர்வதேசத்துக்குச் செல்ல முடியாது" என்றும் அமைச்சர் பந்துல
மேலும் கூறினார்.





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

வயலில் கிடைத்த வைரக்கல்லால் ஒரே நாளில் வாழ்க்கை மாற்றம்.., பெண் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
