பிள்ளையான் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பிடம் முறைப்பாடு (VIDEO)
சிவநேசதுரை சந்திரகாந்தனினால் (பிள்ளையான்) ஏற்படும் ஊடக அடக்குமுறை மற்றும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளார்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின் ஆசிய பணிப்பாளருக்கும் இடையில் இன்று (13.09.2023) காலை கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொழில்சார் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் தர்மசிறி லங்கா பேலி தலைமையில் இடம்பெற்றது.
சர்வதேச ஊடகவியலாளர்
இதன்போது அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின் ஆசிய பணிப்பாளர் ஜெயின் வோர்திங்ஷனிடம் ஊடகவியலாளார் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், அண்மைகாலமாக வட கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும், அச்சுறுத்தல் தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவாட்டத்தில் இடம்பெற்று வரும் ஊடக அடக்குமுறை மற்றும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி அறிக்கை ஒன்றையும் வழங்கியதுடன் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ளதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை மேற்கொள் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
