ஐரோப்பிய நாடொன்றில் முன்னாள் மனைவியை துன்புறுத்திய இலங்கை கணவனுக்கு நேர்ந்த கதி
இத்தாலியின் பெசாரோ பகுதியில் முன்னாள் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இலங்கையருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குடும்ப வன்முறை வழக்கில் தண்டனை பெற்ற 40 வயதான இலங்கையர், தனது முன்னாள் மனைவியை தவறான முறையில் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தண்டனை பெற்றுள்ளார்.
தனது மகனைப் பார்ப்பதற்காகச் சென்ற நேரத்தில் அவர் தனது முன்னாள் மனைவியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு தண்டனை
இந்த குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் கணவன், தான் தனது முன்னாள் மனைவியிடம் நலம் விசாரிக்கவே முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட உடல் ரீதியான தொடர்பு எதிர்பாராமல் நடந்த விபத்து என்றும் வாதிட்டார். எனினும் பாதிக்கப்பட்ட பெண் தனது வழக்கறிஞர் மூலம் வழக்குத் தொடர்ந்ததுடன், 20,000 யூரோ இழப்பீடும் கோரியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, இதுவொரு சிறிய அளவிலான அத்துமீறல் என்பதை அங்கீகரித்த போதிலும், அந்த நபரின் செயலை உறுதி செய்தது.
இதையடுத்து, அவருக்கு நான்கு மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அதே பெண்ணை ஏற்கனவே துன்புறுத்தியதற்காக அவருக்கு ஒரு ஆண்டு மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam