கிழக்கு ஆளுநரால் வரவேற்கப்பட்ட இந்தியாவின் சர்வதேச கப்பல் (Photos)
இலங்கையை வந்தடைந்துள்ள இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கடந்த (05.06.2023) அன்று கொடியசைத்து ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதன்படி சென்னையில் இருந்து புறப்பட்ட எம்வி எம்பிரஸ் என்ற சொகுசுக் கப்பல் இன்று (08.06.2023) திருகோணமலையை வந்தடைந்துள்ளது.
திருகோணமலையை வந்தடைய கப்பலின் அனைத்து ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
சுற்றுலா தள சிறப்பு ஏற்பாடுகள்இதன்போது ஆளுநர் தலைமையில், பிரதான செயலாளர்,ஆளுநரின் செயலாளர், திருக்கோணமலை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி,பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் உத்தியோகபூர்வமாக வரவேற்றக்கப்பட்டிருந்தனர்.
மேலும் கப்பலில் வருகை தந்த பயணிகளுக்கு, திருகோணமலையில் காணப்படும் சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு்ள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
