தொடரும் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை: மாபெரும் ஆர்பாட்ட பேரணிக்கு அழைப்பு
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை கடற்றொழிலாளர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(04.03.2024) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னெடுக்கவுள்ள பேரணி
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பு இன்று (05) காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த பேரணில் இலங்கை ஜனாதிபதிக்கான மனுவை வடக்கு மாகாண ஆளுநர் ஊடாகவும், பாரதப் பிரதமருக்கான மனுவை இந்திய துணைத் தூதுவர் ஊடாகவும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 6 மணி நேரம் முன்

114 Rafale விமானங்களை கேட்கும் இந்திய விமானப்படை., ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தம் உருவாக வாய்ப்பு News Lankasri
