நியூ போர்ட்ரஸ் நிறுவனத்தில் இலங்கையர்:பெருமை என்கிறார் எஸ்.பி
அமெரிக்காவின் நியூ போர்ட்ரஸ் (New Fortress) நிறுவனம் இலங்கைக்கு வந்துள்ளமை நாட்டுக்கு கிடைத்த பலம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (S.B.Dissanayake) தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனம் நாட்டுக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்கும் என்பதுடன் மின் விநியோகத்தை குறைந்த கட்டணத்தில் தடையின்றி வழங்க இணங்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.பி.திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
நியூ போர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனம் எமது நாட்டுக்கு வருவது பலமானது. மின்சார சபை பெரிய போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. இந்த நிறுவனம் குறைந்த விலையில் எரிவாயுவையும் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தையும் வழங்க இணங்கியுள்ளது.
இப்படியான யோசனைகளையே அந்த நிறுவனம் எமக்கு முன்வைத்துள்ளது. இந்த நிறுவனத்துடன் ராஜபக்சவினருக்கு தொடர்பு இருப்பதாக தற்போது கூறுகின்றனர்.
அந்த அமெரிக்க நிறுவனத்தின் நிர்வாகத்தில் நிறைவேற்று அதிகாரியாக இருப்பவர் இலங்கையை சேர்ந்தவர். அவர் சர்வதேசம் அங்கீகரித்த நிபுணர். அவர் உலகத்திற்கு பல புதியவற்றை உருவாக்கிக்கொடுத்து, காப்புரிமை பெற்றுக்கொண்டவர்.
அப்படியான ஒருவர் நியூ போர்ட்ரஸ் நிறுவனத்தின் கட்டளை வழங்கும் அதிகாரியாக இருப்பது இலங்கையர்கள் என்ற வகையில் எமக்கு மிகவும் பெருமைக்குரியது.
எனினும் அவர் ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் அல்ல. இலங்கையில் இருந்த புகழ்பெற்ற விரிவுரையாளர். அவருடன் அமெரிக்க நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்ய வந்திருப்பது மிகவும் சாதகமானது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூ போர்ட்ரஸ் நிறுவனமே, இலங்கையில் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த பங்குகளை விற்பனை செய்யும் உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
