தொழிலதிபர் மொஹமட் குதுப்தீனுக்கு சிறைத்தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
தொழிலதிபர் மொஹமட் குதுப்தீனுக்கு, ரூ.3.9 பில்லியன் மதிப்புள்ள வட் வரி மோசடியில் ஈடுபட்டதற்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று(11) உறுதி செய்துள்ளது.
அதன்படி, உயர்நீதிமன்றம் அவரது மேன்முறையீட்டை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரண்டின் தீர்ப்புகளையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
நீதியரசர்களான ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபேசேகர மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் ஒருமனதாக தீர்ப்பளித்ததுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்பு விசாரணையைத் தவிர்த்து வந்ததை மேற்கோள் காட்டினர்.
மேன்முறையீடுகளும் தள்ளுபடி
2002 மற்றும் 2004 ஆண்டுகளுக்கு இடையில் செய்யப்பட்ட இந்த மோசடியில் மூன்று ஆண்கள் சம்பந்தப்பட்டிருந்ததுடன் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு தப்பியோடியிருந்தனர்.
அவர்களின் மேன்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கில் மேலும் எந்த மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |