நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம் (Video)
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வரிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
யாழ்பாணம்
இந்நிலையில் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டுவரும் நோயாளர்களை சிகிச்சைப் பிரிவுகளுக்கு கொண்டு செல்வதற்குகூட வைத்தியசாலை ஊழியர்கள் இன்மையால் பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு
வடமாகாணம் தழுவிய சுகாதா உத்தியோகத்தர்களின் தொழில்சங்க போராட்ட நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலை முன்பாக இன்று (08.03.2023) திரண்ட உத்தியோகத்தர்கள் பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் வீதியில் பேரணியாக சென்று கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
வரிஉயர்வு மற்றும் அரசாங்கத்தின்கொள்ளை தொடர்பிலும் மின்சார கட்டணத்தினை குறைக்ககோரியும் இந்த நிலையில் சுகாதார ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி
சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலையில் பாதுகாப்பு ஊழியர்கள் சுகாதார ஊழியர்களின் பணியினையும் மேற்கொண்ட சம்பவங்கள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களை 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தினால் காயமடைந்தவர்களை பொறுப்பேற்று சிகிச்சைக்காக அழைத்து செல்ல சுகாதார ஊழியர்கள் காணப்படவில்லை இதனால் பாதுகாப்பு ஊழியர்களே குறித்த பணியினையும் இன்றைய தினம் மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்..யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பூநகரி நல்லூர் பகுதியில் உள்ள குறித்த பிரதேசத்தை வரவேற்கும் வளைவுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது .
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த 4 பேர் விபத்துக்குள்ளாகி நால்வர் காயமடைந்துள்ளனர்.













இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
