இலங்கை தொடர்பில் பிரித்தானிய சஞ்சிகை வெளியிட்ட தகவல் - நிராகரிக்கும் சுகாதார அதிகாரிகள்
சிறார் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நிறை குறைந்த பெண் குழந்தைகள் தொடர்பாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட தகவல்களை, இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இந்த சஞ்சிகையின் ஆய்வில், “இலங்கையில் ஏறத்தாழ 410,000 சிறுமிகள் நிறை குறைந்தவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊட்டச்சத்து மற்றும் சுகாதார அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் இருந்தபோதிலும், 1990 முதல் இந்த துன்பகரமான புள்ளிவிபரத்தில் மாற்றம் எதுவும் இல்லை.
அபாயகரமான நிறைக்குறைவு
அத்துடன், 5 முதல் 19 வயதுக்குட்பட்ட அபாயகரமான நிறை குறைந்த பெண்களின் அதிக எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ள நிலையில் இலங்கை இரண்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையைப் போலல்லாமல், இந்தியாவில் 1990ஆம் ஆண்டு தொடங்கி 33 வருட காலப்பகுதியில் நிறைக்குறைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிக்கை
இந்த நிலையில் இலங்கை சுகாதார அமைச்சின் சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கை 2023ஆம் ஆண்டில் 15,763 குழந்தைகளில் (1.2வீதம்) கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டையும், 2022இல் 18,420 குழந்தைகளில் (1.4வீதம்) ஊட்டச்சத்து குறைப்பாட்டையும் கொண்டுள்ளது.
இதற்கிடையில், 2022ஆம் ஆண்டில் உலகில் கிட்டத்தட்ட 880 மில்லியன் பெரியவர்களும் 159 மில்லியன் சிறுவர்களும் உடல் பருமனுடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |