தமிழின அழிப்பு நினைவுத் தூபி: கனேடிய தரப்பிடம் இலங்கை அரசு கடும் ஆட்சேபனை
இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கனடாத் தூதுவரை இன்று அழைத்து வெளிவிவகார அமைச்சர் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
நினைவுத்தூபி
"ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்,அது தொடர்பில் நினைவுத்தூபியை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கியமை குறித்த இலங்கை அரசின் கடும் ஆட்சேபனையை இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகரிடம் இன்று வெளியிட்டேன்.
The strong objections of the GoSL to the unfounded genocide allegations and the approval for constructing such a monument, was conveyed to the Canadian High Commissioner in Sri Lanka today, at the Foreign Ministry. I further emphasized that such actions would hinder and… pic.twitter.com/y3atul5Fl0
— Vijitha Herath (@HMVijithaHerath) May 14, 2025
இலங்கையின் பன்முகதன்மை கொண்டே சமூகங்களிடையே தேசிய ஒற்றுமை தேசிய நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இது தடையாகவும் விளங்கும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தேன்." - என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
இறுதிக்கட்டப் போர்
"இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசு தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது.
இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவுக்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகின்றது.
2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது" என்றுள்ளது.


புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
