சிறிலங்கா அரசின் இரகசிய திட்டம் அம்பலம் (செய்திகளின் தொகுப்பு ) (Video)
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மிகவும் பெறுமதிமிக்க இரண்டுகாணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் வரையப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு காணிகளின் குத்தகை மூலம் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படும் வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபை செய்துள்ளது.
மேலும், டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள 1.5 ஏக்கர் காணியை ஹோட்டல் மற்றும் வீடமைப்புத் திட்டத்திற்காக சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனமொன்று கட்டுநாயக்கா மற்றும் காலியில் பல காணிகளில் முதலீடு செய்யவுள்ள அதேவேளை மற்றொரு நிறுவனம் ஜா-எலவில் பல காணிகளில் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,