ஜெனீவா விடயத்தில் இலங்கை அரசின் தந்திரமான காய் நகர்த்தல்கள்!
ஜெனீவாத் அமர்வு ஆரம்பமாகும் போதெல்லாம், அதனை அண்மித்த நாட்களில் மனித உரிமைகள், அரசியல் தீர்வு விடயங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை தூசி தட்டி வெள்ளையடிக்கும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துவிடும்.
எதிர்வரும் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஓகஸ்ட் 25ஆம் திகதி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்வது அல்லது பிணை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக ஆலோசகர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
நீண்டகாலமாக ஆலோசகர் குழுவொன்று நியமிக்கப்படாமையால், தங்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களை முன்வைப்பதற்கு கைதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
அவ்வாறெனின் அரசாங்கம் இத்தனைக்காலமும் “வேற்று கிரகத்தில்“ ஆட்சி செய்ததா? என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகிறது “த ரிப்போர்ட்” விசேட தொகுப்பு,