அநுர அரசாங்கத்தின் பழிவாங்கல்களுக்கு உதவும் இலங்கை பொலிஸார்
இலங்கை பொலிஸார், அநுர அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியளார் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக விரோத செயற்பாடுகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ளவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாகவே தொடர்ச்சியான கைது சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அரசாங்கத்தின் குறைபாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அரசாங்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.
இதற்காக, நாம் அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை நிச்சயம் சுட்டிக்காட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.