கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்த இலங்கை அரசாங்கம்: காரணம் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவின் பிராம்ப்டன் நகரில் இலங்கையின் தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்ததாக கூறப்படுகிறது.
தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிராம்ப்டன் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்டதன் பின்னரே பிரம்டனில் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.
வெளிப்படுத்தப்பட்ட தீவிர கவலை
இந்த நிலையில், இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுச்சின்னம் பற்றிய செய்தி இலங்கை அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்தே வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் "தீவிர கவலையை" தெரிவிக்க, கொழும்பில் உள்ள ஒட்டாவாவின் தூதரை வரவழைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது, முன்மொழியப்பட்ட நினைவுச்சின்னம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் தனது "வலுவான கவலையை" வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், மே 18 அன்று தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
