ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி
கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யட்டிநுவர வீதியிலுள்ள இராணுவ முகாமுக்குப் பின்னால் நேற்று குறித்த மாணவி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அம்பிட்டிய கல்தன்ன பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய குறித்த மாணவி நேற்று காலை வீட்டில் இருந்து தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக கூறி சென்றுள்ளார்.
சடலத்தை கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிரிழந்த பாடசாலை மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
