அமெரிக்க குடிமக்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ள நாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆபிரிக்க நாடுகள் மீது விதித்துள்ள பயணத்தடைக்கு பதிலடியாக, மாலி (Mali) மற்றும் புர்கினா பசோ (Burkina Faso) ஆகிய நாடுகள் அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழையத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளன.
முன்னதாக, 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாலி, புர்கினா பசோ, நைஜர் மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடையை வெள்ளை மாளிகை அறிவித்தது.
ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி
இதற்கு "பரஸ்பர மரியாதை" மற்றும் "சமமான இறையாண்மை" ஆகியவற்றின் அடிப்படையில் அதேபோன்ற நடவடிக்கையைத் தாங்களும் எடுப்பதாக அந்த மேற்கு ஆபிரிக்க நாடுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால் நைஜீரியா, தன்சானியா மற்றும் ஸிம்பாப்வே உள்ளிட்ட மேலும் 15 நாடுகளுக்குப் பகுதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தகவல் பரிமாற்றம் மற்றும் அடையாள முகாமைத்துவம் ஆகியவற்றில் போதிய முன்னேற்றம் ஏற்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மாலி மற்றும் புர்கினா பசோ போன்ற நாடுகள் சமீபகாலமாக மேற்கத்திய நாடுகளுடனான உறவைத் தவிர்த்து ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக இருதரப்பு தூதரக உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |