பிரித்தானியாவில் பொதுவெளியில் மோசமாக செயற்பட்ட இலங்கையர் சிறையில் அடைப்பு
பிரித்தானியாவில் தொடரூந்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அநாகரியமான முறையில் நடந்து கொண்ட இலங்கையருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆல்ட்ரிஞ்சாம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான நிஷான் பெர்னாண்டோ என்ற இலங்கையருக்கு, மன்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை இலங்கையர் ஒப்புக்கொண்ட நிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பயணம் செய்யவும் தடை
அத்துடன் பத்து வருடங்களுக்கு பொது போக்குவரத்தில் பெண்களுக்கு அருகில் அமர்ந்திருந்த பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி ஸ்டோக்கில் இருந்து மன்செஸ்டர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடரூந்தில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறி செயற்பட்டதுடன், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் செயற்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.