எமக்கான கட்டணத்தை கூட இலங்கையால் செலுத்த முடியவில்லை! இந்திய இணை அமைச்சர் தகவல்
இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் இந்தியாவில் பெற்றுக் கொள்ளும் பயிற்சிகளுக்கு பெயரளவிலான கட்டணத்தை செலுத்த முடியவில்லை என மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் நிர்வாகம் சிறப்பாக செயற்படாத போது, அது இலங்கையைப் போல் மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நாடுகளிடம் உதவி கேட்க வேண்டிய நிலை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மோசமான பொருளாதார நிலைமை காரணமாக, அவர்கள் ஏனைய நாடுகளிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது.
இதில் வேதனையான விடயம், பயிற்சிக்காக இந்தியா வந்த இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பெயரளவு கட்டணத்தை கூட அந்த நாட்டினால் செலுத்த முடியவில்லை.
அடுத்த ஆண்டு கட்டணம் செலுத்துவதாக தெரிவிப்பு
அவர்கள் இந்த ஆண்டு கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், பணம் இருக்கும்போது அடுத்த ஆண்டு செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, ஒவ்வொரு அரங்கிலும் தன்னிறைவு பெற்றுள்ளது.
இந்தநிலையில் கடவுள் விரும்பினால், உலகத்தையே இந்தியா வழிநடத்தும் என்றும்
அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
