இலங்கைத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய இந்திய விசைப்படகு சங்கத் தலைவர்
ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்களையும், ஈழத்தமிழ் அகதிகளையும் தரக் குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும்பேசிய இந்திய விசைப்படகு சங்கத் தலைவர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (27) கருத்து தெரிவிக்கும் போது ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்களை தகாத வார்த்தைகளால் தூற்றியமைக்கு அவர் இன்று (28.02.2024) மன்னிப்பை கோரியுள்ளார்.
தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள்
அவர் இன்று தெரிவித்ததாவது,
“தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் தங்கள் மீது முன்வைக்கப்பட்டமை மற்றும் தமது கடற்றொழிலாளர்களுக்கு எதிரான எதிர்ப்புகள் போன்ற காரணங்களினாலேயே தான் இவ்வாறு கருத்து தெரிவித்தேன்.
அத்துடன் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு மேலும் தண்டனை காலத்தை நீடிக்க வேண்டும் என கூறியமை எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் ஊடகத்தில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கை தமிழர்களை புண்படுத்தியிருப்பின் என்னை மன்னித்து விடுங்கள்” என கூறியுள்ளார்.
மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது...
இதேவேளை ஊடகங்களுக்கு நேற்று(27) அவர் கருத்து தெரிவித்ததாவது,
”இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு கடற்பரப்பில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் சரிசமாக கடற்றொழிலில் ஈடுபட முடியும்.
அத்துடன் கடவு சீட்டு இன்றி கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துக்கொள்ள முடியும்.
இது தான் சட்டம். ஆனால் இலங்கை கடற்றொழிலாளர்கள் குறித்த கடற்பரப்பில் கடற்படையினரை முன்னிறுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறி செயற்படுகின்றனர்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
