பிரித்தானியாவில் இருந்து வெளியேறுமாறு இலங்கை குடும்பம் ஒன்றுக்கு அதிரடி உத்தரவு
பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உதவி ஆசிரியையாக பணி புரியும் 45 வயதான சமிலா தில்ரக்ஷி மற்றும் அவரது பிள்ளைகளுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவரது கணவர் ரசிக சமரசிங்கவிற்கு பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தல் உத்தரவு
புதிய விசா நடைமுறைகளின் கீழ் 2022ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக பிரித்தானியாவிற்கு வருகை தந்த நிலையில் நாடு கடத்தல் உத்தரவு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இலங்கை குடும்பம் தெரிவித்துள்ளது.

கணவனுக்கு தொடர்ந்தும் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தன்னையும் பிள்ளைகளையும் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளதாக சமிலா தில்ரக்ஷி குறிப்பிட்டுள்ளார்.
தந்தையை பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கு மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், உள்துறை அமைச்சு இது குறித்து கரிசனை கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட இலங்கை குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.