கனடா வாழ் குடும்பம் ஒன்று இலங்கையில் செய்த நெகிழ்ச்சி செயல்
இலங்கையிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை கனடா வாழ் குடும்பம் ஒன்று வழங்கியுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவிற்கான படுக்கைகள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
57 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் வழங்கப்பட்டது. இதன் பெறுமதி 470 மில்லியன் ரூபாவாகும்.
தீவிர சிகிச்சை பிரிவு
சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கே தலைமையில் இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஒவ்வொன்றும் தலா 3 மில்லியன் ரூபாயாகும். 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உருகி உருகி மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்... வெளிச்சம் போட்டு காட்டிய ஜாய் கிறிஸ்டில்லா Manithan
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri