பசிலால் ஆபத்து - கோட்டபாயவை காப்பாற்ற தயாராகும் சிரேஷ்ட அரசியல்வாதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கி நாட்டில் மேலும் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவரை நீக்குவதற்கு பதிலாக, தேசத்தின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தில் சேர ஜனாதிபதியை வற்புறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் இடைக்கால அரசாங்கமும் உடனடியாக நிறுவப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவி நீக்கத்தை தடுக்க எந்தவொரு அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் 113 ஆசன பெரும்பான்மையை வழங்காது என அவர் கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பசில் ராஜபக்ச தேவையான பெரும்பான்மையை பெற்று ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இது நாட்டுக்கு மேலும் பாதகமானது என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சியும் நாடாளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்றால், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை ஒன்றை அரசியலமைப்பில் உள்ளடக்கவில்வை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.