இலங்கையின் இராஜதந்திரிக்கு அவுஸ்திரேலியாவின் நீதிமன்றம் விதித்த அபராதம்
அவுஸ்திரேலியாவின் கென்பரா இல்லத்தில் தமது வீட்டுப் பணிப்பெண் ஒருவரை வாரத்தில் 7 நாட்களும், 14 மணிநேரம் பணியாற்ற செய்தமை மற்றும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு டொலருக்கும் குறைவான ஊதியத்தில் பணி செய்யுமாறு கட்டாயப்படுத்திய இலங்கை இராஜதந்திரிக்கு, அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று 100,000 டொலர் அபராதம் விதித்துள்ளது.
இந்த அபராதம் ஏற்கனவே குறித்த பணிப்பெண்ணுக்கு வழங்கப்படாத நிலுவையில் உள்ள 500,000 டொலர்கள் மற்றும் வட்டிக்கு மேலதிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இராஜதந்திரியான ஹிமாலி அருணதிலக்க, ஏற்கனவே அந்த நிலுவை மற்றும் வட்டியை செலுத்த மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர்
ஹிமாலி அருணதிலக, 2015 மற்றும் 2018 க்கு இடையில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியுள்ளார்.
அவர் இரண்டு குழந்தைகளின் தாயான பிரியங்கா தனரத்ன என்பவரை கென்பெராவின் தனது வீட்டில் வீட்டுப் பணியாளராகப் பணியமர்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சம்பளம் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க அவருக்கு சம்பளம் கொடுப்பதாக உறுதியளித்தே அவரை பணியமர்த்தியுள்ளார்.
எனினும், தாம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், ஒடுக்கப்பட்டதாகவும், மூன்று வருடங்களாக தினமும் வேலை செய்ததாகவும், சமையலறையில் எண்ணெய் ஊற்றிய நிலையில், மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றதாகவும் பிரியங்கா தனரத்ன நீதிமன்றில் சாட்சிமளித்திருந்தார்.
ஹிமாலி அருணதிலக்க
சில வேளைகளில் ஹிமாலி அருணதிலக்க பொழுது போக்கு விருந்துகளில் ஈடுபடும்போது, அதிகாலை ஒரு மணிவரை தாம் பணியாற்ற வேண்டியிருந்ததாக பிரியங்கா குற்றம் சுமத்தியிருந்தார்.
தனது கடவுச்சீட்டை உயர்ஸ்தானிகர் பெற்றுக்கொண்டதாகவும், நாட்டு வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
திருப்தியான உடை மற்றும் உணவை வழங்கவில்லை என்றும் அவர் நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் பணியாற்றிய மூன்று வருடங்களில் ஆயிரக்கணக்கான மணிநேரம் வேலை செய்தபோதும், ஒரு மணி நேரத்திற்கு 65 காசுகளுக்கும் குறைவாகவே சம்பளத்தை ஹிமாலி, பிரியங்காவுக்கு வழங்கியுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் கணக்கிட்டிருந்தனர்.
இந்தநிலையில் இன்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில், தனரத்ன மீதான தனது அதிகாரத்தையும் ஹிமாலி அத்துமீறல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 15 நிமிடங்கள் முன்

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
